search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகேஷ் அம்பானி"

    • நடிகர் ரஜினி தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    • இவர் நிதா அம்பானியின் கலாச்சார மைய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். திரைப்பிரபலங்கள் பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து லைகா தயாரிப்பில் மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் 'லால் சலாம்' திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.


    திரையரங்கம்

    இவ்வாறு பல படங்களில் பிசியாக நடித்து வரும் ரஜினி சமீபத்தில் மும்பையில் அம்பானியின் மனைவி நிதா அம்பானியின் கலாச்சார மைய கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிலையில், ரஜினி தன் நண்பர் அம்பானிக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    ரஜினி பதிவு

    அதில், மும்பையில் உலக தரம் வாய்ந்த பிரம்மாண்ட திரையரங்கம் உருவாக்கியதற்கு என் நண்பர் முகேஷ் அம்பானிக்கு நன்றிகளும் வாழ்த்துகளும். நிதா அம்பானி ஜி இது போன்ற தேசபற்று மிகுந்த மனதை மயக்கும் நிகழ்ச்சியை வழங்கியதற்காக உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் நன்றி சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை. இந்த திரையரங்கில் ஒரு நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று எனக்கு கனவு உள்ளது. அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.


    • மகாராஷ்டிர அரசு மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தல்களையும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது.
    • இசட் பிளஸ் பாதுகாப்புக்கு ஆகும் செலவை முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரிடமே வசூலிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    நாட்டில் மிகவும் பிரபலமானவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு கொடுத்து வருகிறது.

    உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் வி.ஐ.பி.கள், வி.வி.ஐ.பி.கள், விளையாட்டு துறை, பொழுது போக்குதுறை பிரபலங்கள் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரான இந்தியாவை சேர்ந்த பிரபல தொழில் அதிபரும், ரிலையன்ஸ் குழும தலைவருமான முகேஷ் அம்பானி தரப்பில் தனது குடும்பத்தினருக்கு தொடர் அச்சுறுத்தல் இருப்பதாகவும், நாட்டுக்கு நிதி ரீதியாக சீர்குலைப்பு ஏற்படுத்தும் விதமாக தங்களுக்கு தொடர் ஆபத்துகள் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை மனு வைக்கப்பட்டது.

    மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, அசானுதின் அமனுல்லா ஆகியோர் அமர்வு முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தாருக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டுக்கு பயணம் செய்யும்போதும் இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்க உத்தரவிட்டுள்ளது.

    இது தொடர்பாக மகாராஷ்டிர அரசு மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்தல்களையும் சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது.

    அதில், அச்சுறுத்தல்கள் இருப்பதாக உணர்ந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அதற்கான செலவை அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும், பாதுகாப்பு குறைவாக இருப்பதாக உணர்பவர்களை எந்த ஒரு இடத்திலும், பகுதியில் தங்க வைக்க வேண்டும் என கட்டுப்படுத்த கூடாது என கூறப்பட்டுள்ளது.

    55 பாதுகாவலர்கள், 10-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என உத்தரவில் கூறப்பட்டு உள்ளது. இசட் பிளஸ் பாதுகாப்புக்கு ஆகும் செலவை முகேஷ் அம்பானியின் குடும்பத்தினரிடமே வசூலிக்கவும் உத்தரவிட்டு உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24-ந் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
    • ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வந்த கவுதம் அதானி அந்த இடத்தை இழந்தார்.

    புதுடெல்லி:

    ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானியின் சொத்து மதிப்புகள் குறைந்ததையடுத்து ஆசியாவின் முதல் பணக்காரர் இடத்தை முகேஷ் அம்பானி பிடித்தார்.

    அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24-ந் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச்சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் இருந்த கவுதம் அதானியின் பங்குகள் சரியத் தொடங்கின. 4,400 மோடி டாலர்களை (சுமார் ரூ.3.60 லட்சம் கோடி) இழந்து, அப்பட்டியலில் 7,508 கோடி டாலர்களுடன் (சுமார் ரூ.6.14 லட்சம் கோடி) தற்போது 15-வது இடத்தில் உள்ளார்.

    ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி 8,370 கோடி டாலர்கள் (சுமார் ரூ.6.84 லட்சம் கோடி) சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளார்.

    இந்த நிலையில் ஆசியாவின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் வகித்து வந்த கவுதம் அதானி அந்த இடத்தை இழந்தார். இரண்டாம் இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.

    • முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி.
    • இஷா அம்பானிக்கும் ஆனந்த் பிரமலுக்கும் 2018-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    மும்பை :

    தொழில் அதிபரும், இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி. இவருக்கும், பிரமல் குழுமத்தின் தலைமை இயக்குனரான ஆனந்த் பிரமலுக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    இந்நிலையில் இஷா அம்பானிக்கும், ஆனந்த் பிரமலுக்கும் ஆண், பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக முகேஷ் அம்பானியும், அவரது மனைவி நிடா அம்பானி மற்றும் ஆனந்தின் பெற்றோர் அஜய் பிரமல், ஸ்வாதி ஆகியோர் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    அதில், "நேற்று முன்தினம்(சனிக்கிழமை) இஷாவுக்கும், ஆனந்துக்கும் இரட்டை குழந்தைகள் பிறந்தது. பெண் குழந்தைக்கு ஆதியா எனவும், ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரு குழந்தைகளும் நலமாக உள்ளனர்" என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இஷா அம்பானி தற்போது ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் இயக்குனராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சமீப காலமாக வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்குவதில் முகேஷ் அம்பானி மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார்.
    • கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஸ்டோக்பார்க் என்ற கிளப்பை ரூ.656 கோடிக்கு வாங்கினார்.

    துபாய்:

    உலக பணக்காரர்களில் ஒருவர் இந்தியாவின் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் நிறுவன தலைவரான அவர் இந்தியாவின் 2-வது பெரிய பணக்காரர் ஆவார்.

    முகேஷ் அம்பானி வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு துபாயில் ரூ.664 கோடிக்கு சொகுசு பங்களா ஒன்றை அவரது மகன் ஆனந்த் அம்பானி வாங்கினார்.

    இந்தநிலையில் துபாயில் முகேஷ் அம்பானி மீண்டும் ஒரு சொகுசு பங்களாவை வாங்கி உள்ளார். துபாயின் பாம் ஜூமேரா தீவில் ரூ.1352 கோடிக்கு பங்களாவை வாங்கி இருக்கிறார். முன்பு வாங்கிய பங்களாவை விட இரண்டு மடங்கு விலை அதிகமாகும்.

    இந்த சொகுசு பங்களாவை குவைத்தை சேர்ந்த அல்ஷாயா குழுமத்தின் தலைவராக உள்ள முகமது அல்ஷாயாவிடம் இருந்து முகேஷ் அம்பானி கடந்த வாரம் வாங்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    மகன் ஆனந்த் அம்பானிக்காக வாங்கிய வீடும், தற்போது புதிதாக வாங்கியுள்ள வீடும் அருகருகே இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த சொகுசு பங்களாவில் 10 படுக்கை அறைகள், ஒரு ஸ்பா, உட்புறம், வெளிப்புறங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன.

    சமீப காலமாக வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்குவதில் முகேஷ் அம்பானி மிகவும் ஆர்வமாக இருந்து வருகிறார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் உள்ள ஸ்டோக்பார்க் என்ற கிளப்பை ரூ.656 கோடிக்கு வாங்கினார்.

    • ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி.
    • பத்ரிநாத் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் முகேஷ் அம்பானி கலந்து கொண்டார்.

    பத்ரிநாத் :

    ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி நேற்று உத்தரகாண்டின் பத்ரிநாத் கோவிலுக்கு சென்றார்.

    இமயமலையில் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஹெலிகாப்டரில் சென்ற அவர், அங்கு நடந்த சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

    பின்னர் பத்ரிநாத் மற்றும் கேதார்நாத் கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.5 கோடி நன்கொடை வழங்கினார்.

    • முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர் மும்பை கிர்காவ் பகுதியில் ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனைக்கும் மிரட்டல் விடுத்திருந்தார்.

    மும்பை:

    மும்பை கிர்காவ் பகுதியில் ரிலையன்ஸ் பவுண்டேசன் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு நேற்று மதியம் மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் மருத்துவமனையை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டல் விடுத்தார். மேலும், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். அதன்பின், அவர் இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினர் டி.பி. மார்க் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில், அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த ராகேஷ் குமார் மிஸ்ரா என்பவரை பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் போலீசார் கைது செய்தனர். மிரட்டல் விடுக்க பயன்படுத்திய மொபைல் போனையும் போலீசார் மீட்டனர். பீகார் காவல்துறை உதவியுடன் அந்த மிரட்டல் ஆசாமியைக் கைது செய்த மும்பை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஆகஸ்டு மாதம் ஒருவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்தார்.
    • இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நகை கடைக்காரர் ஒருவரை கைது செய்தனர்.

    மும்பை :

    மும்பை கிர்காவ் பகுதியில் ரிலையன்ஸ் பவுண்டேசன் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரிக்கு நேற்று மதியம் 12.57 மணிக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்தார். அவர் ஆஸ்பத்திரியை குண்டு வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்தார். மேலும் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நிடா அம்பானி, மகன்கள் ஆகாஷ் அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். பின்னர் அவர் இணைப்பை துண்டித்துவிட்டார்.

    இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் டி.பி. மார்க் போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்பானி குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை தீவிரமாக தேடிவருகின்றனர். கடந்த ஆகஸ்டு மாதம் இதேபோல ரிலையன்ஸ் ஆஸ்பத்திரிக்கு போன் செய்து ஒருவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நகை கடைக்காரர் ஒருவரை கைது செய்தனர்.

    இந்தநிலையில் முகேஷ் அம்பானி குடும்பத்துக்கு மீண்டும் மர்மநபர் கொலை மிரட்டல் விடுத்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளார்.
    • நீதா அம்பானிக்கு ‘ஒய் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

    மும்பை :

    பிரபல தொழில் அதிபரான ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மும்பையில் வசித்து வருகிறார். இவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளார். இவருக்கு மத்திய அரசு 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கி வந்தது. இந்தநிலையில் மத்திய அரசு அவரது பாதுகாப்பை அதிகரித்து உள்ளது. இதன்படி அவருக்கு உச்சப்பட்ச பாதுகாப்பு வகையான 'இசட் பிளஸ்' பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. இதன்படி 40-50 கமாண்டோ படை வீரர்கள் ஆயுதங்களுடன் அவரது பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    இவர்கள் அம்பானியின் வீடு, அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிப்பதுடன் அவர் பயணம் செய்யும் போது அவருக்கு பாதுகாப்பாக இருப்பார்கள். முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானிக்கு 'ஒய் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு முகமைகளிடம் இருந்து வந்த எச்சரிக்கையை அடுத்து முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    தொழில் அதிபர் கவுதம் அதானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்க கடந்த மாதம் மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    • கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி குடும்பத்துடன் சென்றார்.
    • முகேஷ் அம்பானிக்கு கோவில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர்.

    திருவனந்தபுரம்:

    இந்தியாவின் பெரும் தொழில் அதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி.

    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவிலுக்கு முகேஷ் அம்பானி குடும்பத்துடன் சென்றார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினர்.

    பின்னர் அவர் கோவில் அதிகாரிகளிடம் அங்கு நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    சாமி தரிசனம் முடிந்ததும் முகேஷ் அம்பானி கோவிலுக்கு காணிக்கையாக ரூ.1 கோடியே 51 லட்சத்திற்கு காசோலை வழங்கினார்.

    முகேஷ் அம்பானி வழங்கிய காணிக்கை கோவில் அன்னதான திட்டத்திற்கு செலவிடப்படும் எனக்கூறப்படுகிறது.

    • வெங்கடேசப் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்பு.
    • புறப்படும் முன்பு, கோவில் யானைகளுக்கு உணவு வழங்கினார்.

    திருமலை:

    ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி இன்று அதிகாலை திருப்பதிக்கு வந்தார். மலையடிவாரத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் தங்கிய பிறகு, திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில் வெங்கடேசப் பெருமானுக்கு நடைபெற்ற ஒரு மணி நேர சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார். அவருடன் ரிலையன்ஸ் நிறுவன உயர் அதிகாரிகளும் வந்திருந்தனர்.

    வழிபாட்டிற்குப் பிறகு, சன்னதியில் வைத்து காணிக்கையாக ஒன்றரை கோடி ரூபாய்க்கான காசோலையை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி வெங்கட தர்ம ரெட்டியிடம் முகேஷ் அம்பானி வழங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்படும் முன்பு, கோவில் யானைகளுக்கு அவர் உணவு வழங்கியதாக தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.

    • அனைத்து நகரம், தாலுகா வாரியாக ஜியோ 5ஜி சேவை வழங்குவோம்.
    • மிக உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் 5ஜி சேவை.

    மும்பை:

    ரிலையன்ஸ் நிறுவனத்தின் 45வது ஆண்டு பொதுக்கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் பேசிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி கூறியதாவது:-

    ரிலையன்ஸ் ஜியோ உலகின் அதிவேக 5ஜி சேவை திட்டத்தை தயாரித்துள்ளது. தீபாவளிக்கு, டெல்லி, மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய மெட்ரோ நகரங்கள் உட்பட பல முக்கிய நகரங்களில் ஜியோ 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவோம். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள், இந்தியாவின் அனைத்து நகரம், தாலுகா வாரியாக ஜியோ 5ஜி சேவையை வழங்குவோம்.

    ஜியோ 5ஜி சேவை அனைவரையும், அனைத்து இடங்களையும் மிக உயர்ந்த தரம் மற்றும் மலிவு விலையில் இணைக்கும். சீனா மற்றும் அமெரிக்காவை விட இந்தியாவை தரவு பொருளாதாரமாக மாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய ஜியோ அமைப்பின் தலைவர் ஆகாஷ் அம்பானி, இந்தியா முழுவதும் 5ஜி நெட்வொர்க்கை உருவாக்க 2 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என்று கூறினார்.

    ×